. சூரவதை
……………..
ஈரவிதை முளைக்கும்
முன்பே சித்திரவதை?
சூரவதை செய்வதற்கு
வீரவிதை தேவை?
மாறுபட சூரரை
வதைத்தவனே முருகன்!
கூறுபட சூரரை
கொன்றவனே இறைவன்!
இனவெறிக் காடையரை
வதைத்தவனே தலைவன்
எம்மினத்தில் தோன்றிய
பிரபாகரனே முருகன்!
அடித்தவனைத் திருப்பி
அடித்தவனே மறவன்!
அரக்கனை சூரவதை
செய்தவனே எம் தலைவன்!
உரிமைகளைப் பறித்தவனைக்
கூண்டோடு அழித்தான்
ஒப்பில்லாத் தலைவனாய்க்
கரிகாலன் நிலைத்தான்!
பிரபாகரன் முருகனின்
வடிவில் உருவெடுத்தான்!
பெண்டுகளை ஒழித்தவனைக்
கண்டுகண்டு ஒழித்தான்!
நிலத்தையும் மொழியையும்
மீட்கக்களம் புகுந்தான்!
நெறிகெட்டப் பகைவரை
சூரவதை புரிந்தான்!
வேல்கொண்டு தாக்குமவன்
வேற்றுருவம் எடுத்தான்
இனவெறியன் வதைபடவே எறிகணை எடுத்தான்!
வதைபடவே வைத்தவனை
வதைபடவே வைத்தான்
வான்புலி கண்டவனே
வரலாற்றைப் படைத்தான்!
பொங்கிஎழும் சூரியனாய்
எம்தலைவன் எழுந்தான்
புல்லர்களைச் சூரவதை
செய்திடவே சினந்தான்!
ஆசிரியர்:
அபிராமி கவிதாசன்
12.11.2024