சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-280,
தலைப்பு!
*வெற்றிப் பயணம்*
……………………..
வாழ்க்கை முழுவதும்
பயணம்தான் – நல்
வழிதவறினால்
துயரம்தான்!
புதிய தலைமை
வந்தாச்சு – எல்லாம்
பொதுவாய் ஆக
வழியாச்சு!
எங்கட பயணம்
இனிதாகும் – இனி
என்றே மனமும்
மகிழ்வாகும்!
எங்கள் நிலத்தில்
இராணுவமும் – அட
இனிமேல் திரும்பும்
நிலையாகும்!
புதிய சிங்களக்
குடியேற்றம் – நாளை
வெளியேறினால்
பெருமாற்றம்!
தப்பிப் பிழைத்த
எம்மக்கள் – இன்றே
நாடு திரும்ப
முடிவாகும்!
. சமநிலை உரிமை
கிடைத்திடவும் – வேட்டுச்
சத்த மின்றி
வாழ்ந்திடவும்!
பொறுத்தே இருந்து
பார்த்திடுவோம்
புதிய ஆட்சியை
ஏற்றிடுவோம்!
தேர்தல் அரசியல்
பயணத்திலே – ஈழ
தேசம் மலருமா
கணத்தினிலே ?
நல்லது நடக்க
வாழ்த்திடுவோம்! – யாவரும்
நலமாய் வாழவே
உழைத்திடுவோம்!
எங்கட பயணம்
தொடரட்டும் – எங்கட
சனங்களின் ரணங்கள்
மறையட்டும்!
மூவின மக்களுக்கு
வாழ்வளிப்போம் – புதிய
ஜனாதி பதிக்குத்
தோள்கொடுப்போம்!
-ஆசிரியை:
அபிராமி கவிதாசன்
01.10.2024