சந்தம் சிந்தும் சந்திப்பு!
வாரம்-278
17.09.2024
தேர்தல்
………….
இன்று தேர்தல்
எங்கட தேசத்தில்
வென்று முடிப்பரா
எங்கட மக்கள் ?
அன்று தேர்தல்
ஆதிக்கர் பக்கம்
இன்று தேர்தல்
எங்கட பக்கமா?
மக்கள் நாயகம்
மடிந்து போனதா?
திக்குகள் தோறும்
தீயவர் வெல்வதா?
அடிமைகள் திரண்டால்
ஆழிப் பேரலை!
விடியலை நல்குமா?
தேர்தலின் ஓரலை?
எங்கட உயிரை
எங்க உடைமையை
எங்கட உரிமையை
எடுத்தவன் தேர்தலா?
வங்க தேசமாய்
வருமா புரட்சி ?
எங்கட தேர்தலில்
ஆளுவோர் சூழ்ச்சி!
ஒன்று பட்டால்
உண்டு வெற்றி
நன்று பாடினான்
நமது பாரதி
இந்தத் தேர்தலில்
வெற்றியோ தோல்வியோ
சொந்த மண்ணில்
நிற்பதே ஆண்மை!
வெற்றியும் தோல்வியும்
வீரர்க் கழகு
பற்றி எரிக
தேர்தல் உலகு!
ஈழம் மீட்பதே
நமது இலக்கு?
காலம் கனிய
விடியும் கிழக்கு!
-ஆசிரியர் அபிராமி கவிதாசன்.