சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும்
சந்திப்பு வாரம்-273.

கவித்தலைப்பு! “அடிக்கல்”
…………….
. அடிக்கல்லே இல்லாமல்
கோபுரங்கள் உண்டா?
அனைத்திற்கும்
அடிக்கல்லே
முதன்மை யாகும்!
படிக்கல்லே இல்லாமல்
நடப்பா ருண்டா?
பாருக்குள் இதைமறுக்க
எவரும் உண்டா?

வெற்றிக்கு அடிக்கற்கள்
திட்டம் ஆகும்
வேந்தற்கு அடிக்கற்கள்
வீரர் ஆகும்
நட்புக்கு அடிக்கல்லே
உண்மை யாகும்!
நாட்டிற்கு அடிக்கல்லே
பொருளாதாரம் ஆகும்

அன்பிற்கு அடிக்கல்லே
தாய்மை யாகும்!
ஆளுமைக்கு அடிக்கல்லே
அறிவே ஆகும்!
பண்பிற்கு அடிக்கல்லே
ஒழுக்கம் ஆகும்
பைந்தமிழ்க்கு அடிக்கல்லே
தொல்காப் பியமாகும்!

தமிழர்க்கு அடிக்கல் லே
தமிழே ஆகும்!
தமிழர்க்கு பெருமிதமே
சங்கநூற்கள் ஆகும்
தமிழீழ அடிக்கற்கள்
மாவீரர் ஆகும்
தமிழறிவுக்கு அடிக்கல்
திருக்குறள் ஆகும்!

காதலின் அடிக்கல்லே
நேச மாகும்!
கவிதையின் அடிக்கல்லே
எதுகை யாகும்
மேதையின் அடிக்கல்லே
அடக்கமாகும்
மேன்மையின் அடிக்கல்லே
சேவை யாகும்!

பெண்னுக்கு அடிக்கல்லே
துணிச்சல் ஆகும்.
பேச்சிற்கு அடிக்கல்லே
நாவன்மை யாகும்!
மக்களுக்கு அடிக்கல்லே
உழைப்பு ஆகும்!
மழைக்கு அடிக்கல்லே
மேகம் ஆகும்!

..அபிராமி கவிதாசன்
08.07.2024