சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்—258
தலைப்பு:
மாறுமோ மோகம்
……………..
தேர்தலில் விவசாயி சின்னம்
தீர்ப்பு வருமா? என்று –
நாம் தமிழர்க்கு
மாறுமோ மோகம்!
ஈழ விடுதலை
மலர வேண்டுமென்று
புலம் பெயர்
தமிழர்க்கு மாறுமோ மோகம்!
ஈன்ற தன்மகனைச்
சான்றோன் ஆக்க வேண்டுமென்று
தாய்க்கு மாறுமோ மோகம்!
மனம் கவர்ந்த
காதலனை அடைய
வேண்டுமென்று
காதலிக்கு மாறுமோ மோகம்!
காதல் வலை வீசி
கவிதை மொழிபேசி
வஞ்சியரை ஏமாற்றுவதில் – சில
வஞ்சகர்க்கு மாறுமோ மோகம்!
அடுத்தவர் பணத்தை
ஆட்டையைப் போடுவதில் – சில
அயோக்கியர்க்கு மாறுமோ மோகம்!
நம்பவைத்துக்
கழுத்தறுக்கும் – சில
நரியர்க்கு ஏமாற்றிப் பிழைப்பதில் என்றுமே
மாறுமோ மோகம்!
திருக்குறளைப் பரப்புவதில்
என் ஆருயிர் மகன்
கவிதனுக்கு மாறுமோ மோகம்!
புலம்பெயர்
தமிழர்க்கு தமிழ்மீது
உள்ள பற்று என்பது
எந்நிலையிலும்
மாறுமோ மோகம்!
நான் இருக்கும் வரை
இறக்கும் வரை
கவிதைமேல் எனக்கு
இருக்கும் தாகம் என்பது
மாறுமோ மோகம்!
—- அபிராமி கவிதாசன்
26.03.2024