சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்—-252
கவித்தலைப்பு!
காதலர்
…….
இன்பத்தின் உச்சம்
காதல்
எதற்கும் துணிச்சல்
காதல்
அன்புக்கு வானம்
காதல்
அனைத்தும் வெல்லும்
காதல்
என்புக்குள் தோல் போல்
காதல்
இதயத்தின் துடிப்பே
காதல்
பாசத்தின் தேனே
காதல்
பழமைக்கும் பழமை
காதல்
உயிர்களின் உறவே
காதல்
உலகத்தின் உயிர்ப்பே
காதல்
இயற்கையின் இயக்கம்
காதல்
இதயத்தின் வாசல்
காதல்
மோதலில் பிறக்கும்
காதல்
மண்ணுக்கு விண்மேல் காதல்
வண்டுக்கு மண்மேல்
காதல்
நிலவுக்கு வான்மேல்
காதல்
கடலுக்கு கரைமேல்
காதல்
அபிராமி கவிதாசன்
06.02 2024