சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -192 /

தலைப்பு ! “ மழைநீர்”

மழைநீர் நீயே
மண்ணின் உயிர்நீர்
விழிநீர் துடைப்பாய்
விண்ணின் துளிர்நீர்

பௌவமே பிறப்பிடம்
பாய்ந்தோடி அடைக்கலம்
ஆதியும் அந்தமும்
அங்கேதான் சங்கமம்

வாடிய பயிருக்கு
வள்ளல் நீர்அன்றோ
ஓடியே உயிர்காக்கும்
உன்னத உறவன்றோ

ஆலங்கட்டி நீபெய்தால்
ஆகாயம் ஏந்திடுமே
ஓலக்குடிசை மக்களுக்கும்
உள்மெல்லாம் மகிழ்ந்திடுமே

மண்வாசம் வீசிடும்
மழைத்துளி தொட்டிட
வண்ணமாய் வாழ்வுதரும்
வாழ்க்கை செழித்திட

நன்றி வணக்கம் 🙏
கவிப்பார்வைக்கும் …தட்டிக்கொடுப்புக்கும் மிக்க நன்றிகள் 🙏