08.03.2022
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக…
“திமிர்”
திமிர் உன்னுள் சிக்குண்டால்
திமிருதல் கடினமே
உமிழும் சொற்களும்
உதவாது சிதறுமே /
ஆணவம் நம்மை
ஆட்க்கொள்ளும் தருணம்
வேதனை வார்த்தை
வில்லம்பாய் பாயுமே /
சோதனைக் காலமாய்
சொல்லதனை ஏற்றுமே
சாதனை படைக்குமே
சாதூரிய பொறுமையே /
நடையும் உடையும்
நடத்தையின் முறைமையும்
ஆணவக் குணத்தினை
அடிக்கோடிட்டு காட்டுமே /
கர்வம் வைத்தே
காத்திருக்கும் இருதயமே
சர்வ அதிகாரமும்
சாமத்தியம் என்றெண்ணாதே /
அகங்களும் அழகல்ல
அன்பியம் அழகாகும்
சுகமான இதயங்களே
சுதாரிப்பீர் சூழ்நிலையை /
நன்றி பாவைஅண்ணா🙏