சந்தம் சிந்தும் சந்திப்புக்காக …01.03.2022
“புதைந்த ஞாபகம்”
உக்றையின் நாடே
உன்நிலை எனக்கும் வந்தனவே
துக்கம் நெஞ்சை
பக்கமடைக்கும் பகிர்ந்திடவே
உயிரை காக்க
உறவைமீட்க இடம் பெயர்ந்தோம்
துயிலும்இரவு விடிந்திடாமலே
துயர் பெற்றோம்
பிரிந்த இல்லம்
பின்புஅடைந்திடும் உரிமை இழந்து
பிரியா விடைபெற்றோம்
குண்டு மழையும்
குடித்தன உயிர்களை
நண்டு பிடியாய்
நாட்புறமும் தாக்கியே
ரஷ்சிய நாட்டின் ரகசியசூழ்ச்சியாய்
புசுப்பம் கரிகிட பொசுங்கி மடிந்தனர்
சண்டை ஓய்து
சமரசம் நிலவ
கண்டும் மகிழ்வேன்
கண்களுக்கு இனியென என்றே
நன்றி வணக்கம்🙏
பாவை அண்ணா..