வியாழன் கவிதை

அடையாளம்

ஜெயம் தங்கராஜா

கவி 730

அடையாளம்

தமிழர்கள் என்ற அடையாளம் பிறப்பு
தமிழால் அடைந்தோமே இத்தனை சிறப்பு
தமிழ் குடியில் பிறந்தோம் வளர்ந்தோம்
தமிழை தாய்மொழியாகக் கொண்டதால் மகிழ்ந்தோம்

பிறதேசம் வந்து வாழ்ந்தாலும் வாழ்வு
மறக்கலாகாது தமிழ் இனத்தின் மான்பு
தமிழ் அவமானம் அல்ல அடையாளம்
தமிழ் எங்களின் பேச்சல்ல மூச்சு

ஊரையோ நாட்டையோ விட்டாலும் இன்று
பேரும் புகழும் தமிழாலேதான் உண்டு
தாய்மொழி நாவிலே இனிமையாய் தவழட்டும்
வாய்வழி வாழ்ந்தது வாழ்க்கையை தழுவட்டும்

தனித்துவமான பண்பாடுடைய இனம் இது
தனித்துவமான மரபின் பாரம்பரியம் இது
ஏன் தமிழின் மேன்மை பெரியது
நான் யாரென சொல்லும் அறிவது

தேனெனும் தமிழை குழந்தைகள் ருசிக்கட்டும்
மானென துள்ளியே மகழ்ச்சியாய் புசிக்கட்டும்
எங்கு பிறந்தாலும் தமிழ் வளரட்டும்
மங்காது தனித்துவம் தலைமுறைக்கும் மிளிரட்டும்

ஜெயம்
20-06-2024