வியாழன் கவிதை

அடையாளம்

நகுலா சிவநாதன்

அடையாளம்

அடையாளம் காத்த அமைதிவாழ்வு
அன்னை தேசத்தின் போரால் சிதைந்தது
அகதி வாழ்வில் புதைந்த நாட்கள்
ஆகுதியாய் விடுதலை நோக்கி எழுந்தது
படையோடு தாக்கிய பகைவனின் ஏவுகணை
பாருக்குள் ஏதிலியாய் ஆக்கிய நாட்கள் எத்தனை?

நடைப்பிணமான நம்தேச மக்கள்
நாலாபுறமும் சிதறிய தேசங்களில்
வாழ்விழந்த சோகத்திலும் வரலாறு படைத்தனர்
அடையாளம் காத்திட அகதிக்காய் ஓர்தினம்

மொழியும் சமயமும் இருகண்களாய்
மொழிந்த வாழ்வுக்குள்
வழிகாட்டி மனிதராய் அடுத்தசந்ததியை
அன்னைத்தமிழோடும் ஐரோப்பிய தேசமதில்
அகதியென வாழ்ந்தாலும்
சகதியாய் இல்லாமல் சாதனை படைக்கும்
சரித்திரபுருசர்களாய் ஆக்கிய தமிழர்
அடையாளம் காத்து அவனியில் உயர்கின்றனர்

நகுலா சிவநாதன் 1768