வியாழன் கவிதை

அடையாளம்

சிவதர்சனி

வியாழன் கவி 1997

அடையாளம்..
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே
அவர்க்கென்று குணமுண்டு
என்ற கவி நாமக்கல் இராமலிங்கம்
பிள்ளை
அழுத்தமாய்ச் சொன்ன பின்னே
நாமோ
அடையாளம் அறிந்து அதை நிலை
நிறுத்தி
பின் வரும் சந்ததிக்கும் உணர்த்திடல்
முறையன்றோ…!

முந்தோன்றிய மூத்த
மொழியே நம் தமிழ்
அதை முனைப்போடு காத்திட
ஓர் இனம்
உயிர்த் தியாகம் செய்த
கதை எப்படிமறப்பதாம்
நாடிழந்து அகதியென நாமம்
நாம் சுமந்தே அலைய
நமக்கென அடையாளமாய்
மாறியதோ அகதிஎனும் நாமம்..

விழித்திடுவோம் தமிழர் நாம்
மொழியே நம் அடையாளம்
அதுவே பண்பாட்டின் உயிர்
நாடியென உணர்ந்திடுவோம்
எம் சந்ததி மொழி மறந்து
மந்தைகளாய் இலக்கின்றி
வாழ்தல் தவிர்க்க மொழியொடு
வாழவைப்பதே கடமை என்றே
மனத்திலே இருத்திடுவோம்…
சிவதர்சனி இராகவன்
19/6/2024