வியாழன் கவி :
“அடையாளம் ‘
தொன்று தொட்டு நம் இனம்
பாதை கண்ட நம் நிலம்
கூறு பட்டு பொலிவிழந்து
போனதனால்
சிதறுண்டு வாழ்கிறோம்
நம் அடையாளம் பேணுவதே
மூச்சினிலே சுமக்கின்றோம்
உச்சி மீது வானிடிந்து
வீழ்ந்து விட்ட போதினிலும்
நம் இனத்தின் அடையாளம்
தாய் தமிழ் மொழி அதனை
பேணுவதை தொடர்கின்றோம்
எத்திசை யில் நம் வாழ்வு
நகர்கின்ற போதினிலும்
நமக்கான அடையாளம்
மொழி அதனை தலைமுறைக்கு
தக்க படி காவிடவே தாய் மொழி
கல்வி பணி அதனை தொடர்ந்திடுவோம் பார் எங்கும்
நம் அடையாளம் பதித்திடுவோம்
நன்றி