அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-33
20-06-2024
அடையாளம்
சொந்த தேசம் துறந்து
பெற்ற உறவைப் பிரிந்து
சுற்றித் திரிந்த மண்ணை கடந்து
சுகமான நட்பை இழந்து
மூட்டை முடிச்சை கையிலேந்தி.
நாட்டை விட்டு வெளியேறி
வலையில்ப் போட்ட மீனாய்
வந்த அகதி வாழ்க்கை
வலியைச் சுமந்து கொண்டு
விடிவை எண்ணி நாமும்
கிடைத்த அடையாளம் காத்து
வாழ்ந்த காலமிது!
எம் சந்ததிக்கு அடையாளம்
சொந்த மண்ணில் கொஞ்சம்
சோகம் அற்ற வாழ்க்கை .
எந்தன் கனவாய்ப் போச்சா??
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.