அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-44
09-07-2024
அடிக்கல் அல்லது அத்திவாரம்
வடக்கு வாசல் வீடதுவாம்
வட கிழக்கு சாமி அறையாம்
சிறு பவுண் போட்டு அத்திவாரமிட
சீராய் குடும்பம் சிறந்திடுமாம்
பன்னிரெண்டு ஆண்டு பல சிறப்பு
பவுணாய் குடும்பம் தழைத்தோங்க
பாளாய்ப் போன நோயொன்று
பாடாய்ப் படுத்த மரகதத்தை
சாஸ்திரி போட்ட அடிக்கல்லில்
சரியான பொருத்தம் வீட்டிலில்லை
கட்டிய வீட்டை எட்டு நாளில்
காலி பண்ணினர் குடும்பத்துடன்
கடவுள் போட்ட அத்திவாரத்தில்
கனவான வீடு வந்தமைய
மரகதம் உடலும் சிறுதேறு
மனங்களில் பலவாறு மாற்றங்களே!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.