சந்தம் சிந்தும் கவிதை

ஷர்ளா தரன்

கந்து வட்டிக்கு காசு வாங்கி
கடனில் கல்லு பறித்து
வெந்திடும் வெய்யிலில்
வியர்வையால் குளித்து
அத்திவாரம் தோண்டி
ஐந்து சந்தி மண் எடுத்து
ஐங்கரன் துனணயோடு
அடிக்கல் நாட்டி
கொஞ்சம் கொஞ்சமாய்
கட்டிய வீடு
சொர்க்கம் போல் வாழ
சொந்தங்களோடு வாழ
அத்திவாரமோ பலம்
ஆடாமல் நிற்குது பார்….

பெற்ற பிள்ளைகளை
பெருமையோடு வளர்க்க
கற்ற கல்வி அது துனண போகும்
அரிச்சுவடி முதல் அறுவடை வரை
அகலாது அத்திவாரத்தின் பலம்
பெற்றவர் கை தனில்
பொறுப்பு உண்டு
கற்றவராய் வளர்ந்திட
கை கொடுத்து வளர்த்திடு
அத்திவாரம் தனை
அசையாமல் போட்டிடு

ஷர்ளா தரன்