வியாழன் கவிதை

விடியாத இரவொன்று…………

இரா.விஜயகௌரி

புலராத பொழுதொன்றின்
புலம்பல்களின். திரள்வுகளை
நிரப்பி நிறைத்து மௌனிக்கிறது
அழியாத. கோலங்களாய் அலங்கரித்து

ஓடும். பொழுது தனை கையகப்படுத்தாது
கனவுக்காலங்களின். காட்சித்திரட்சியுள்
வெற்றுக்காகிதமாய். வினாக்குறிகளை
தனக்குள் நிறைக்கின்ற அதி மேதாவியாய்

வாய்ப்பந்தல். போடுவதும் வாய்கிழியப் பேசுவதும்
செறிவார்ந்த செயல்களின்றி காயப்
புலம்பல்களின் கீறல்களை. ரசிப்பதுமாய்
வாழ்வுக் கோலத்தை கலைக்கும் மனிதர்களாய்

சிந்தனைக் கதவைத் திறக்காத இவர்கள்
வக்கணையாய்ப் பேசும் வல்ல சீவன்கள்
வடிவமைக்கத்தெரியாத புல்லுருவிகள்
ஆம்விடியாத இரவுகளின் வீணான. பித்தர்கள்