வியாழன் கவிதை

விடியாத இரவொன்று..

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1947..

விடியாத இரவொன்று…

விடியாத இரவொன்று
இங்கில்லை என்றே
நம்பிக்கை கொண்டு
நகரும் வாழ்வியலில்
மடியாத துயரில்ல
மாதவமே செய்தவராய்
யாசகமே கேட்கின்றோம்
நேசமுடன் வாழ்ந்திடுக..

பூசனைகள் தேவையில்லை
போதனைகள் தேவையில்லை
வேதனை தந்திடாதீர்
வென்றிடவே துணையாவீர்
மூத்தோரைப் பேணிடப்
பூத்ததொரு நாளிலே
நீத்தவர் போலவெண்ணாது
சேர்த்திணைத்து வாழ்ந்திட
விடியும் ஒரு பொழுதாகும்
வியந்தே தான் நோக்குவீர்..
சிவதர்சனி இராகவன்
14/3/2024