வியாழன் கவிதை

“விடியாத இரவொன்று” ——————

கவிதை நேரம்-14.03.2024
கவி இலக்கம்-1839
“விடியாத இரவொன்று”
———————-
விடியும் விடியும் என்று
விழித்திருந்து காத்திருந்தோம்
விடியும் அந்த காலைப் பொழுது
விழிதனையே நாம் தொலைத்தோம்
ஊர் இழந்து உறவிழந்து
உடன் பிறப்பு தனையிழந்து
உயிரென சுமந்து வந்தோம்
உறவுகளால் நொந்தழுதோம்
அடைக்கலம் என அபயம் பெற்றோம்
அத்தனையும் சுமந்து வாழ்ந்தோம்
எம் உறவுகளால் நொந்து அழுதோம்
இன்றைய உறவுகளான இளையோர்
போதைக்கு அடிமையாகி அழிகின்றனர்
பெற்றோர் விடியாத இரவாக விழித்திருந்து
ஏங்கி அழுது மன நோயாளி ஆகின்றனரே
பாதை வழியில் சென்ற இளம் பெண்கள்
முற்றத்தில் விளையாடிய பிள்ளை
காமுகரின் வன்செயலால் ஆற்று ஓடையில்
வாள் வெட்டில் இளைஞர் பலி
இத்தனை அவலமும் எம்மிடையே
விடுதலைக்கு குரல் கொடுத்தால்
விதைத்தவனே வருவாய் விதைத்தவனும் நீயே
விடியும் உமதன்றோ விரைந்து வா
விடியாத இரவாக விடியலை தருவாயே