வியாழன் கவிதை

விடியாத இரவொன்று…..

விடியாத இரவொன்று….
மெளனத்தின் கதவுகள் மூடிய பாதை
தகனத்தில் உறவுகள் தவித்த வேளை
சொல்லொணத் துன்பத்தில் இதயத்தின் பாரம்
வில்லெனத் தைக்குமே வார்த்தையின் காரம்

ராசியற்றவள் என்றிடும் அம்பு
ராச்சியம் முழுதிலும் பாய்ச்சிய சொல்லு
போக்கிடமற்றதாய் புறந்தள்ளிய
கணத்தில்
தேக்கிட முடியாத கண்ணீர் அருவி
தேம்பியே மடிந்தாள் விடியாத இரவில்
நாளை விடியல் நமக்கெனத் துணிந்தாள்
காரிருள் கிழித்து கங்கையாய்த் திரண்டாள்
யாரிவர் நானிலப்புவியில் நம்விதி உரைக்க

போரிட எழுவாய் புலம்பலை நிறுத்து
வாழ்வுறு தகுதியை வரலாறாய் பதித்து

விடியாத இரவின் விடியலாய் நிமிர்த்து
விமர்சனப் பதிவினை வெற்றியாய் அணிந்து
வீறுகொள் விண்மீனென ஒளிர்ந்து
ஞாலமே நமக்கென திரண்டிடும்
விடியாத இரவுகளும் விடியலின் வெள்ளியே!
நன்றி. மிக்கநன்றி