வியாழன் கவிதை

வளமாக்கும் உழைப்பு

வளமாக்கும் உழைப்பு

வேர்வை சிந்தி உழைக்கின்றான்
வேரின் மைந்தன் இவனன்றோ!
கூர்மை வாழ்வின் குணவாளன்
குடும்பம் காக்கும் தொழிலாளி!
நேர்மை உழைப்பு நெஞ்சினிலே
நேசம் வைத்து வாழ்பவனாம்
பாரே போற்றும் பண்பாளன்
பலமே கொடுப்போம் உழைப்புக்கே!

வயலை உழுது வளமாக்கி
வண்ணப்பயிரைச் செழிப்பாக்கி
அயர்வை தமக்குள் காட்டாமல்
அல்லும் பகலும் உழைப்பவனே!
உயர்வை வாழ்வின் குறிக்கோளாய்
உண்மை உழைப்பைப் பலமாக்கி
தயவாய் பயிரைத் விளைவித்தே
தரணி போற்றும் நல்லோனே!

நகுலா சிவநாதன்! 1760