வியாழன் கவிதை

வலியோ முதுமை

வலியோ முதுமை

கெலியோ பிறப்பில் இளமை
வலியோ இறப்பின் முதுமை
பலியோ சலிப்பில் பழமை

கூலியோ அன்றைய இனிமை
காலியோ முதிர்வின்
தனிமை
சோலியோ வயோதிப பதுமை

உற்றார் உறவினரன்றி
சிறகொடிந்த வேதனை
வேலி
பற்றறிந்த போதனை
வேதாந்த சீதனம் ஜாலி

மனதில் பிரிவின்
ஆதிக்கம்
கனமான உயிரைப்
பாதிக்க தினந்தினம்
இரவு பகல் சோதிக்க
பலியின் வலியோ முதுமை.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து