வியாழன் கவிதை

வலியதோ முதுமை………

இரா.விஜயகௌரி

படிநிலை வாழ்க்கையின்
பரம்பலில் நிலை பெறும்
வளம் மிகு செழிப்பதன்
எழில்நிறை வாழ்தொடர்

அத்தனை பருவமும் பேரெழில்
பயனுறு விதைப்பினில் அறுவடை
இறுகப்பின்னிய. தளைகளாய் உறவு
இனிதாய்த் தொடர்ந்த நோயறு தொடர்கள்

குழந்தையின்செம்மொழி அழகெனில்
செவ்வையாம் முதுமையும் வலியது
வலிகளும் வழிகளும் கண்டதோர் நிறைவு
அனுபவக் கோர்வையின் பேராய்வு

குழந்தையின் செம்மொழி அழகெனில்
செவ்வையாம் முதுமையும் வலியது
வலிகளும் வழிகளும் கண்டதோர் நிறைவு
அனுபவக் கோர்வையின் பேராய்வு

சிறுகச்சிறுக்க் கட்டிய. கோபுரம்
சித்திர வார்ப்பினில் அனைத்தும் கோர்த்தெழ
முதுமையின் வளமையை வலிமையாய் எதிர்கொள
பணத்தின் வலுவும் உடலின் வளமும் கைகோர்க்க

முனகி முக்கிமூலையில் முடங்கி. வாழ்வதோ
தினமும் ரசித்து திட்டமாய் வகுத்து
நம்மையே. உணர்ந்துநயமுற பகிர்ந்து
வழிகளை. யாத்து வலிமையால் வென்றெழுதலே. முதுமை