வியாழன் கவிதை

வலியதோ முதுமை…

வசந்தா ஜெகதீசன்

ஆற்றல் விருட்சத்தின் அளப்பெரும் தகமை
போற்றும் நிகழ்வுகள் புவியின் உரிமை
தோல்வியும் எழுகையும் வீரியமெழுத
தொன்மையின் பாரியம் வரமென நிலவ
முதுமையின் தரிசனம் முகிழுமே எமக்குள்
முன்றலில் கரிசனம் குன்றிடும் பாதை
நிழல்தரு தருவென நிமிர்ந்திட்ட வேளை
அன்றில் பறவையாய் அலைந்திட்ட பொழுதில்
எத்தனை கரிசனை ஏற்றமாய் மிளிரும்
எங்கும் இளமையின் வீறுகொள் நிகழும்
தாங்கிடும் தகமையின் தனித்துவ உலகு
தாங்கலாய் இன்று தளர்வது கடினம்
ஏங்கலில் உள்ளம் இடரது இன்றி
வாழ்தலில் விதைத்திட்ட வனப்பின் மிகைக்குள்
தொய்தலின்றிய தோழமை உரமே
நெய்தல் ஆடைபோல் நிஜத்தை பேணும்
நிமிர்தல் வாழ்வின் நிலவரமாகும்
வலிமையே முதுமை வையம்கொள் தகமை.

நன்றி மிக்க நன்றி