வியாழன் கவிதை

வலியதோ முதுமை

வலியதோ முதுமை

வழியது கிடைக்க வரமாகும் வாழ்வு
வலியது போக்கி வளம்காணும் மாண்பு
பழியது பேசா பௌவியம் கொண்டு
தளிரது போல தழைத்திட வேண்டும்

நறுமலர் பூவாய் நமதிளம் வாழ்வு
முதுமையின் கோலம் முனைப்பாகும் ஒருநாள்
கடுகதி வாழ்வு கரைந்திட நாளும்
கணமொரு காரியம் கைகூடும் வேளை

வலியது முதுமை அல்ல
வளம் காணுமே நல்வாழ்வு
பிறந்தவர் இறப்பர் நியதியின் இயல்பு
பிறப்பிலும் வாழ்வு புதுமையின் பொக்கிசம்

;வலியல்ல முதுமை வசந்ததின் வார்ப்பு
நதிபோல ஓட நமக்கொரு பருவம்
நாளைய வலியும் நமக்காக பிறக்கும்
நனியொரு வரமாய் வலிமை பெற்றிடுவோம்

நகுலா சிவநாதன் 1755