வியாழன் கவிதை

வரமும் வாழ்வும் இல(135) 30/05/24

நேவிஸ் பிலிப்

நேவிஸ் பிலிப்
கவி இல (135) 30/05/24
வரமா வாழ்வா

தொன்று தொட்டு வானிலே
வான வில் தோன்றுது
எண்ணம் மயங்குது
வண்ணம் தீட்டுது
தூரிகை ஒன்று

குருவில்லாச் சீடனாம்
குயிலின் மென்னோசை
ஒலிக்குது
காக்கா கூட்டினிலே
தஞ்சம் கொண்டதனால்

இன்சுவை இள நீரை
தலையால் தருகிறது தென்னை
காலடியில் வார்த்த நீருக்கு
நன்றிக் காணிக்கையாய்

பகுத்தறியும் மானிடமே நீ மட்டும்
ஏன் மதி மயங்குகிறாய்
வரமாய் பெற்ற பெரு வாழ்வு
கொடையாய் கொண்ட இயற்கையினை
சிதைத்த தனாலன்றோ
துன்பங்களின்றுனக்கு

வரமாய் பெற்ற வாழ்வினை
வளமாய் வாழ்ந்திட
தரமான சிந்தனைகளால்
தடைகள் பல கடந்திட
வளமாய் வாழ்த்திடுவோம்.
நன்றி வணக்கம்.

பெரு வாழ்வையும்
கொடையாய் கொண்ட