வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மனிதத்தின் நேயமே….

மனிதம் உலகில் புதைந்த நேரம்
மனிதநேயம் சிதைந்த காலம்
அழிவும் அவலமும் பாரமாகும்
உதவும் அகங்கள் ஊனமாகும்

இரவும் பகலும் நாளின் உரிமை
மனிதநேயம் மனிதர் கடமை
வாழ்வின் விடியல் நேயம் கொள்ள
வறுமைத்தடையை நாங்கள் வெல்ல

அன்பு, பாசம், அரவணைப்பு
அகத்தில் பூக்குமா கருணை வாழ்வு
ஈகை ஈரம் இனிதாய் பூக்குமா

மனிதநேயமே மானிடச் சிறப்பு

போரும் வாழ்வும் போரிடும் தருணம்
பூக்கும் நேயமே புன்னகை தேசமே
விரைந்த மலர
வெற்றி நிறைய
சிந்தை நிறையுமா மனித நேயம்

இருளாய் சூழும் இவ்வுலகில்
இன்று வாழும் நேயத்தில்
இதயம் கசியும் ஈரத்தில்
உலகைக் காக்கும்
உளி போல
ஒளிர்வாய் ஒளிரும்
நேய ஒளி
ஒற்றுமை வானில்
உதவும் மதி

அகத்தின் இருளை அகற்றுமே
மனிதத்தின் மகுடமாய் மலருமே
மனதின் ஈரமாய் நிறையும்
நன்றி