வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கல்லறை விழுமியங்கள் ….
போரின் வதை தந்த புறநானூறு
வேரின் விதையிட்ட விழுமியக்கூறு
காலத்தின் கலங்கரையாய் ஞாலத்தின் நாற்றுக்களாய்
ஈழத்தின் இலக்குகள்
இன்னலின் முகவரிகள்

துடுப்பற்ற படகுகளாய்
துண்டிக்கப்பட்டவர்கள்
தாய் தேச வரலாற்றை
தாங்கியே மடிந்தவர்கள்
போர்கால அவலத்தில்
புதையுண்டார் கல்லறையில்

வாசத்து மலர்களே வாடிய பூக்களே
பாசத்துப் பாசறையில் பயின்றிட்ட பாலகரே
நேசத்தில் உறங்கும்
வீரத்துக் காவியர்கள்!

விழுமியத்து விழுதுகள்
ஈழத்து விண்மீன்கள்
காலத்தை கலங்கரையாய் காத்திட்ட மாவீரர்
நாம் வாழ தமையீர்ந்தார்
நன்றிக்கே வித்தனார்
கல்லறைக் கதை கேளு
காவியமே வரலாறு!

நன்றி மிக்க நன்றி