சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

நேரமிது…
பருவத்தின் மாற்றம்
பனிகாலத் தோற்றம்
உருளுது உலகம்
உருண்டோம் ஆண்டு
எத்தனை பதிவு
எண்ணத்தில் நினைவு
பசுமையை நகர்த்தி
வெறுமையை புகுத்தி
வெற்றுடல் தருக்கள்
வீழ்த்துது சருகை
வீதியில் கிடந்து
விளக்குதே வாழ்வை
மறுபடி தளிர்க்க
மாற்றத்தை உணர்த்தும்
தோற்றத்தின் நேரமிது
காலத்தின் மிடுக்கே
நேரத்தின் மதிப்பே.
நன்றி
மிக்கநன்றி