சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
குழலோசை….
உலகின் வரமாய்
உயிர்ப்பின் ஒலியாய்
அகிலம் ஆளும் குழலின் ஒசை
மழலை மொழியில்
மனதின் ஈர்ப்பில்
ரசனை பெருக்கும்
குழலின் ஒசை

இசையாய் நாதம்
இயல்பில் ஒன்ற
மழையாய் சாரல்
மண்ணில் வீழும்
பசுமைப் படர்வில்
மூங்கில் இசையில்
குழலின் ஒசை
வருடும் தென்றல்
அசையும் புவிக்குள்
அனைத்தும் வசமே
குழலின் ஓசை
இசையின் இனமே!
நன்றி