சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வலைப்பூ
உலகை ஒன்றாய் இணைக்கும்
உறவை இணைத்துப் படரும்
அறிவும் செயலும் உராய்ந்து
அகில நிகழ்வாய் விரிந்து
ஆக்கும் விருத்தி அதிகம்
அழிவும் நிகழ்ந்து தொடரும்
வலைப் பூ உலகின் வசமாய்
வாழ்வே இன்று மாயம்
அழைப்பில் அன்பில் பஞ்சம்
அவரவர் ஆற்றல் மிஞ்சும்
விழாக்கள் இன்று உச்சம்
வீண் செலவே அதிக பட்சம்
நன்றும் தீதும் நாமாய்
நகர்ந்து வெல்லும் வாழ்வே
நலிதலின்றி நலமாய்
நாளும் மிளிரும் திடமாய்!
நன்றி
மிக்க நன்றி