சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

திறக்குமா விழிகள்
திருந்துமா மனங்கள்?
வலிமை குன்றிடும் வாழ்வும் சிதைந்திடும்
அறியாமைத் தீயே அனலாய் எரிந்திடும்
நிறத்தின் கூறுகள் பாகுபடுத்திடும்
மனித வாழ்விலே நிதமும் உறவிடும்
வர்ணக்கோலமே நிறத்தின் பேதமே
உணர்வைக் கிள்ளியே உனக்குச் சொல்கிறேன்
ஒடும் குருதியில் வேறுபாடில்லை
உணர்வின் விழிப்பிலே மாறுபாடில்லை
நிறத்தின் பகுப்பிலே நிதமும் குன்றுவோர்
இருளும் மனதிற்குள் ஒளிரும் மனிதர்கள்

விழியின் ஆழியே விந்தை உன்னால் தான்
அழிவின் முன்னே நீ அகலொளியாய் விழித்திடு
நிறத்தில் வாழ்வில்லை திறத்தில் வாழ்வுண்டு
உராயும் மனங்களை உளிகள் செதுக்கட்டும்
திறக்கும் விழிகளில் திறமை ஜெயிக்கட்டும்.
நன்றி