சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

ஆற்றல்…
வெற்றி தொடும் விதைப்பு
விவேகத்தின் உழைப்பு
ஆற்றலெனும் துடுப்பு
அவரவரின் முனைப்பு

நோக்கும் திறன் மிடுக்கே
ஆக்கும் திறன் அரிதே
ஆற்றலெனும் விளக்கே
போற்றும் புவிச் சுழற்சி
மிளிரும் பல துறைகள்
ஒளிரும் பல முனைகள்
விளையும் பல தொழில்கள்
வேண்டும் புவி உலகில்
ஆற்றல் தரும் விதைப்பே
அடித்தளத்தின் ஊற்றே
தாண்டும் தடை உடைத்தே
ஆற்றல் மிகைப் படுத்தி
ஆளும் நிலை நிமிர்த்து
வாழ்வு வசமாகும்
வரம்புயர வாழ்த்தும்.
நன்றி
மிக்க நன்றி