சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி..
கனவு மெய்ப்பட வேண்டும்…
கல்லறை நாயகர்கள் கருத்தரித்த முற்றம்
சொல்லொணாத் துயரத்தை சுருக்கிட்ட மனிதம்
வீரத்தின் வேட்கையை நிமிர்த்திடும் குன்றிலே
கார்த்திகை மலர்களின்
காணிக்கை வனப்பிலே
கருவறை நாயகர் கனவுகள் மெய்ப்படும்
கரிகாலன் வாழ்வுரம்
கம்பீர மிடுக்கிடும்
வேதனை வேரறுத்து
விம்மலை ஊடறுத்து
கல்லறைத் தெய்வங்கள்
கனவு மெய்ப்படும்
காலத்தின் கருவூன்றி
ஞாலத்தை நமதாக்கும்.
நன்றிக்கு வி்த்தாகி
நாளுமே விழுதெறியும்.!

நன்றி
மிக்க நன்றி.