வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

உறவுமுறை உரிமமே….
பேறுகள் பலதில் பெரும்பேறிது
கிட்டிடும் பதவியில் கிடைத்தற்கரியது
பெண்ணினப் பிறப்பில் உறவுகள் விரியும்
தன்னிலை வாழ்வில் தக்கதாய்
தொடரும்
எண்ணியே மகிழும் சுற்றத்தின் உறவு
சொல்லியே அழைக்கும் முறைகளின் பரிவு
அன்பிலே திளைக்கும் அளப்பெரும் சொத்து
அன்னைக்கு நிகராய் ஆனது ஏது
சேயாய் மகளாய் அக்காவாய் தங்கையாய்
உடனாய் தொடருமே உரிமத்தின் பாசம்
மருமகளாகிட மற்றொரு நேசம்
மனைவியாய் தாயாய் மாமியாய் பாட்டியாய் பூட்டியாய்
மகுடங்கள் சூடும்
பெண்ணினப் பேறே பெருமிதமாகும்
பேறுகள் பலதை ஆவணமாக்கும்
உறவுமுறைகள் உரிமத்தின் உறுதி
உதிரத்தின் உறவாய் உரம்பெறும் நியதி!
வாழ்க்கை அரணின் வரம்பே மிகுதி!
வலிமை பெற்றுயர் பெண்ணாய் வாழ் நீ!
நன்றி
மிக்க நன்றி