வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

நிமிர்வின் சுவடுகள்…
அளப்பெரும் வரமாய்
அவதார புருஷராய்
போற்றிடும் தகமையில்
நாற்றிட்ட நல்லோர்
நம்பிக்கை விதைத்தோர்
நாளுமே வாழ்வை
நமக்கென ஈர்ந்தோர்
மூத்தோர் என்னும்
முதுசத்தின் உறவோர்
வார்ப்புகள் பலதாய்
வரம்புகள் சுவராய்
காத்திடம் வாழ்வாய்
காணிக்கை செய்தோர்
ஆற்றிய சேவைகள்
அளப்பெரும் தொண்டுகள்
வரமெனப் பெற்றோம்
வாஞ்சையில் வளர்ந்தோம்
கடினத்தை உணர்ந்தோம்
நிமிர்வின் சுவடுகள்
நீங்களே எமக்கு
சாலவும் சிறந்திட்ட சான்றின் உறவோர்
உங்களின் சுவட்டில் எங்களின் பாதம்
உராயும் பொழுதே
உணர்வில் நீளும்.
ஆழக்கடலாய் அலைகள் குமுறும்
அவரவர் அகத்தில் நிமிர்வின் சுவடு
அடித்தளமாகிடும் அன்பின் விளைவு.!
நன்றி
மிக்க நன்றி