தினங்களின் திசைக்காட்டி ..
திதியாய் தினமாய் வரையறை
தினங்கள் காட்டும் நடைமுறை
மாற்றம் பலதாய் உருவாக்கம்
மாறிடும் கணிப்பால் தடுமாற்றம்
முச்சக்தி விழாவில் ஒன்பது நாள்
நவராத்திரி என்னும் கணிப்பீடு
நடைமுறை மாறுது எட்டாக
புரட்டாதிச் சனியிலும் தடுமாற்றம்
எதுவென ஏற்பது சீராகும்
எடுத்தே உரைத்திட எளிதாகும்
தினங்கள் திசைகாட்டி தெளிவாகும்
எதிர்வரும் காலங்கள் பதில் தருமா
எண்திசையெங்கும் ஓர்முறையாய்
இயல்புறு வாழ்வின் நடைமுறையாய்
பொதுமை பேணிடும் கணிப்பீடாய்
பூக்கட்டும் புத்தெழில் நாட்காட்டி
பொதுமை நாட்டிடும் தினக்காட்டி
அங்கொன்றாய் இங்கொன்றாய் விரிசலின்றி
ஓற்றுமை நிலைக்க வழிகாட்டி
பூக்குமா புத்தாண்டு நாட்காட்டி
கணிப்பீடு செய்யும் நிலையங்களே
கணக்கீட்டில் கரிசனை காட்டீரோ.
நன்றி