சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

உருளும் உலகில்……
பொழுதின் விடிவு
கால நகர்வு
விரையும் கணதி
விழிக்குள் அவதி
சுழலும் பூமி
சுற்றும் வேளை
சூழல் மாசில் சிக்குதல் போல
அவதி வாழ்வும் அகத்தின் இருளும்
புன்னகை மறந்த பூக்களினமாய்
தன்னிலை மறந்து தளர்வில் மடிந்து
தன்னம்பிக்கை குன்றுது
தனித்துவம் மங்குது
மாசு விலத்திடு மனதைத் திறந்திடு
ஆற்றல் நிறைவதே அளப்பெரும் சொத்து. உருளும் உலகே நிமிர்வென நிறுத்து.!

நன்றி.
மிக்க நன்றி.