இரண்டாயிரம் நாளாய்…
வலி புதைந்த வாழ்வில்
வரட்சியிலே அகங்கள்
விழி வழியும் நீரில்
விரக்தி நிலை தேடல்
எரிமலையின் குமுறல்
எண்திசையின் வழியில்
வந்திடுவார் என்னும் பரிதவிப்பின்
தொடரில்
துடித்திடுமே இதயம்
தூங்காத விழிக்குள்
துளைத்திடும் உருவம்
ஏங்கிடும் வாழ்வில்
ஈட்டியாய் துளைக்கும்
இதயத்தின் ரணமே
இறப்பு வரை கணதி
இரண்டாயிரம் நாட்கள்
இற்றைவரை சுமக்கும்
உறவுகளின் வாழ்வு
அனலிடை மெழுகே
அவலத்தின் நெருப்பே.
நன்றி
தொகுப்பாளர்கள் இருவருக்கும்
தொடர்கவியாளர்கள் அனைவருக்கும் நனிமிகு நன்றிகள். பாராட்டுக்கள்.