சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பிரிவுத் துயர்….
இணையரென்னும் ஒற்றை மொழி
இயல்பில் ஒன்றிய வாழ்வின்வழி
கோசல்யா என்னும் படைப்பாளி
பெண்ணியம் போற்றும் உளவாளி
கண்ணியம் நிறைந்த ஆசனாய்
கவிதையில் உலாவரும் காத்திடமும்
இலக்கியம் கவிதா நிகழ்வென்று
புலத்தில் புரட்சியை நிலையாக்கி
பலத்தில் குன்றிய வேளையில்
பாதித்த நோயின் பாதகமே
காலத்தின் கருணை முற்றுப்புள்ளி
கணக்குதே மனது உனைத்தேடி
விதைத்தவை விருட்சமாய் வேரூன்றும்
வாழ்ந்திட்ட வாழ்வு கதைகூறும்
என்றுமே எம்முடன் உறைந்தவளே
எதிலியற்ற எஜமானி
போற்றும் தகமை புடமிடவே
வாழ்த்தும் வாழ்வே வரமம்மா.
வாழ்வீர் எம்மோடு வாழ்வாங்கு!
நன்றி