வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

புழுதி வாரி எழும் மண்வாசம்..
புழுதி நிலக் காற்றே
புவி நிலத்து மூச்சே
கொஞ்சம் நீ நில்லு
மண் வாசம் சொல்!

பருவங்கள் தோறும் என் பாதைகள் மாறும்
பயிரினத்தை தழுவி நிதமாக வாறேன்
மலரினங்கள் கோடி மண்வாசம் சூடி
என்னோடு உறவே எண்ணங்கள் நிறைவே!

வளம் தந்து வரம்பாக்கும் நிலத்தாயே நானும்
வயல் தோறும் விதைப்பாகும் படர்கொடியின் வேரே
என்னோடு சொந்தம் எனக்கான விதைப்பு
உன்னாலே எதுவும் உறவல்ல காற்றே!

காற்றென்னை விலத்தி காரியங்கள் உண்டோ
நீராகும் சுழற்சி என்னோடு முயற்சி
நிதமாகும் சுவாசமே என்காற்றின் மூச்சே!

ஐம்பூத இயல்பில் ஐக்கியங்கள் நாமே
நீ வேறு நான் வேறு நிஜமற்ற போட்டி
ஓன்றோடு ஓன்றாய் ஓற்றுமையின் சாட்சி
புழுதியினை வாரி மண்வாசம் வீசும்
காற்றாக நானும் நிலமாக நீயும்
நீர்கொண்டு செழித்து நெருப்பாக சமைத்து
ஆகாயக் குடைக்குள் அடைக்கலம் அவனி!.
நன்றி
மிக்க நன்றி