சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சமூகம்…
ஒற்றைச் சொல்லில் ஒரு விருட்சம்
ஒங்கி வளர்ந்து கிளை பரப்பும்
மூங்கில்த் தருவாய் இசை எழுப்பும்
முழுமதி நிலவாய் முனைப்பெழுதும்

சமூகச் சிந்தை சரி நிகராய்
சாலச் சிறப்பு சரிதங்களாய்
உலகின் உயர்வை உருவாக்கும்
உராய்ந்து திறக்கும் விழிப்புணர்வே

அழகில் அவனி மெய்ப்படுமே
அதியுயர் வழித்தடம் புலப்படுமே
சமூகம் சார்ந்த ஒற்றைக்குடில்
சாதனை நிறைக்கும் விருட்சநிழல்.
நன்றி

சந்தம் சிந்தும் கவிக்கள தொகுப்பாளருக்கும், பாமுகப்பங்காற்றலுக்கும், ஒவ்வொரு கவியாளர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.