வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

துளிநீர்….
ஆறாய் நதியாய் குளமாய் ஊற்றாய்
அருவி பாயுது நிலத்தில் வீச்சாய்
அச்சம் களைந்து தாகம் போக்கும்
நீரின் ஊற்றே நிறைந்த செல்வம்

சுத்தம் பேணும் சுகாதாரம் வாழும்
நித்தம் நீரே நிரம்பி வழியும்
பயிரின் வீச்சில் பசுமை நிறையும்
பாரே நீரால் பசிந்தாய் மலரும்

காரின் பிரசவம் துளியாய்ச் சிந்தும்
வானின் வருகை வளத்தைப் பெருக்கும்
ஞாலம் ஒளிர நற்கொடை நீரே
நாளும் வாழ நன்கொடை நீரே
நன்றி