வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

மூத்தோர் முதுசம்…
காக்கும் கடனும் கருத்தின் உரமும்
நோக்கும் செயலும் நூற்குமே உலகை
வாக்கும் அறமும் வளைந்து பின்னும்
வருந்தி உழைத்தே வறுமை நீக்கும்
நாளை என்பது நம்பிக்கைப் படகு
நாளும் வலிக்கும் துடுப்பாய் மனிதம்
நீளும் கனவில் நிறைந்தது வாழ்வு
நிறைந்து கற்றிட மிளிர்வது சிறப்பு
இடரின் ஈகை இயல்பில் ஒன்றும்
இல்லையென வாழ்தல் குன்றும்
உழைப்பின் மிகையில் உதவி நல்கும்
உறவுத் தோப்பே உரமாய் ஊன்றும்
வேரின் விருட்சம் வெற்றி மகுடம்
வேதனை கலையும் வீம்பின் உச்சம்
மனித உணர்வே மகத்துவ யாப்பு
மூத்தோர் வாழ்வே முதுசக் குறிப்பு
போற்று போற்று புலமையைப் போற்று
மூத்தோர் முதுசம் தந்த அறமே
முழுமதி வாழ்வெனப் போற்றிடத் தகுமே.
நன்றி