வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

உன்னதமே உன்னதமாய்…..
ஈருளி உருண்டோட
ஈகையில் தினம் மலர
பேருவகை மனம் விரும்பும்
பேதமையை கலைந்தெறியும்
வாதமென வலுப்படுமே
வாழ்க்கையென உரமெழுமே
காலமது கைது செய்யும்
காணிக்கை உவகை கொள்ளும்
மனித இனம் மதிப்பாகும்
மாந்தரினம் சிறப்பாகும்
உன்னதத்தின் உன்னதமாய்
உரிமை வெல்லும் இருசுடராய்
உறவெனும் உயிர்ப்பிலே
உலகாளும் மனிதமே
மதிதிறனின் மதிப்பெழுதும்
மனவெழுச்சி எழுகை பெறும்
பெண்ணினமும் ஆணினமும்
பேதமற்ற ஒரினமாய்
உன்னதத்தின் உயிர்நாடி
ஒற்றுமையின் வேரோடி
ஒன்றுபடும் வாழ்வறமே
உன்னதமாய் உயிர்ப்பெழுதும்
மாந்தவினம் மதிப்பாகும்.
நன்றி
மிக்க நன்றி