சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

காதலர் தினமே …
ஓன்றித்த உயர்வில்
ஓற்றுமை அன்பில்
இரண்டறக் கலக்கும்
ஈருயிர் இணைவு
ஈர்க்கும் அன்பில்
பாசப் பகிர்வில்
காதல் உறவே
காத்திடமாகும்
இதயப் பகிர்வே
இனிதென மலரும்
காதல் தினமாய்
கனியும் உலகு!.
நன்றி