வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

கணினி வித்தகியே….
ஏடெடுத்து தொடுத்தவரி எத்தனையோ பாடலாச்சு
கவிதொடுத்து வரும்வரியை
கடுகதியில் உள்வாங்கி
கணனி வித்தகியாய் பெயராச்சு
கவிதை நேரத் தொகுப்போடு
நள்ளிரவு தாண்டியும்
தொகுத்த பணி சிறப்பாச்சு
செய்தி வளம் தேடி வந்து
தரும் பணியும் முனைப்பாச்சு
தட்டிக் கொடுப்போடும்
பாராட்டும் பணிவோடும்
விட்டகலா வியப்புக்கள்
விதைத்து நின்ற சோதரியே
சுற்றி நின்ற பல ஆர்வம்
சுருக்கி வைத்த குடைபோல
கரங்களின் பாதிப்புடன்
கணாது. தேடுகிறோம்
எத்தனையோ ஆண்டுகளாய்
எம்மோடு ஒன்றித்து
எண்ணற்ற கவிதைகளின்
முகரியாய் முன்னுரையாய்
பத்திரமாய் பதித்த
பக்குவங்கள் பலநூறு
ஓயாது எழுதுகோல் ஒளிரவைத்த சித்திரமே
மிளிர்வோடும் மிடுக்கோடும்
மீண்டெழுக கெளரியே
பற்பலதாய் பரிணமித்த
பாதைகள் தேடிடிடுது
பலர் மனதும் வாடிடுது
நலமாகி விரைந்தெழுக
நட்புடன் முன்வருக!
ஆழத்தின் உபாதை தான்
ஓட்டத்தின் முடக்கம் தான்
தேக்கத்தை திரட்டியெழ
சோதரியே சுகம்பெறுக.!
நன்றி.
மிக்க நன்றி.