சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

சாந்தி………..
உறைந்துள்ள ஓவியமாய்
உலகையே வென்றிடும்
அமைதியே அடிப்பலம்
ஆழ்மனதின் மனத்திடம்
சலனத்தைப் புறந்தள்ளும்
சாந்தியே மெயப்படும்
கடினத்தை வென்றுயர்ந்து
காரியத்தை நிருபிக்கும்
சாந்திக்கு ஒப்பயர்வு
சரணத்தின் மெய்யுறவு
வாழ்க்கையின் வரவேற்பு
வற்றாத நீருற்று
சாந்தியே சரணகதி
சக்தி வாய்ந்த உலகையறி.
நன்றி
வசந்தா ஜெகதீசன்