உருமாறும் புதிய கோலங்கள்……..
ஒடி நகருதே காலம்
ஒற்றுமை விதையிடும் நேரம்
வாடி நிற்கும் கொக்காய்
மாறி விடாது எழுவோம்
தேடிப் பயிரிடல் போலே
தேட்டங்கள் எங்கென ஓடு
நாட்டங்கள் உள்ளதை நாடு
தமிழ் ஓங்கி விதையிடும் வேளை
தனித்துவம் மிளிருமே நாளை
கடுகதிப் பொழுதினில் கணனி
காலத்தின் முத்திரை கவனி
ஞாலத்தில் நம்மின மிகுதி
நல்லாக்கத்தின் படைப்பே உறுதி
தேக்கத்தின் ஆழிக்குள் முத்தாய்
புது நாற்றென விதையிடு சொத்தாய்
காலத்தின் திரையே அவனி
கோலத்தில் புதுமையைக் கவனி
உருமாறிடும் யுத்திகள் பலதாய்
உலகே வியக்குமுன் எழு நீ.
நன்றி