சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

காதலின் கலப்பு..
பதியமிடாத பார்வைக் கலப்பு
பாசமாய் படரும் பற்றின் பிடிப்பு
ஆழமறியாத அன்பின் மதிப்பு
ஆராவாரத்தின் அடைக்கல மகுடம்
தாயின் அன்பிலும் தனித்துவம்
தக்க காதலே மகத்துவம்
ஈரஅகத்தின் இருப்பிடத் தேவதை
இயல்பில் மனித வாழ்வியல் முத்திரை
காதல்கலப்பே கருணை உளமே
காத்திட வாழ்வின் கரிசனம் மெய்யே.!
நன்றி மிக்க நன்றி.